தொழில்நுட்பம்
ஐபோன்

ரூ. 59.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2021-11-16 11:31 GMT   |   Update On 2021-11-16 11:31 GMT
பொறியியல் மாணவர் மறு உருவாக்கம் செய்த ஐபோன் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.


யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் மாடல் 80 ஆயிரத்து 1 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,51,074) விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் மாணவர் ஒருவர் பழைய ஐபோன் எக்ஸ் மாடலை மறுஉருவாக்கம் செய்து அதில் யு.எஸ்.பி. சி போர்ட்-ஐ பொருத்தினார்.

நல்ல வேளையாக ஐபோனும் ஆப்பிள் தயாரித்ததை போன்றே சரியாக இயங்குகிறது. மாணவர் முயற்சியில் யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் என்ற பெருமையுடன், இந்த மாடல் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. முன்னதாக இதுபோன்ற மாடிபிகேஷன்கள் பலமுறை ஐபோன்களில் செய்யப்பட்டு இருக்கின்றன.



எனினும் பாஸ்ட் சார்ஜிங், டேட்டா டிரான்ஸ்பர், ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர அம்சங்களை இதுவரை யாரும் வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை. அந்த வரிசையில், யு.எஸ்.பி. சி மாட் கொண்ட இந்த ஐபோன்- டேட்டா டிரான்ஸ்பர், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர பயன்களை வழங்குகிறது. தோற்றத்திலும் இந்த ஐபோனில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.

பார்ப்பதற்கும் இது வழக்கமான ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. சி போர்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. "யு.எஸ்.பி. சி ஐபோனினை ஆப்பிள் வெளியிட காத்திருந்தேன். பொருத்தவரை போதும் என நினைத்து எனக்கென நானே ஒன்றை உருவாக்கி கொண்டேன்," என பொறியியலில் முதுகலை பட்டம் பயின்று வரும் கென் பிலோயல் தெரிவித்தார். 

Tags:    

Similar News