செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா கவர்னராக நியமனம் - முகநூல், டுவிட்டரில் இருந்து விலகினார் தமிழிசை

Published On 2019-09-06 00:06 GMT   |   Update On 2019-09-06 00:06 GMT
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் முகநூல் மற்றும் டுவிட்டரில் இருந்து விலகினார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 8-ந்தேதி அவர் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுத்துக்கொண்டார்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது அவரது முகநூல் கணக்கில் நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது, அவர் பேட்டி, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் அதில் இடம் பெற்றது. மத்திய அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு டுவிட்டரிலே சுடச்சுட பதில் அளித்து வந்தார்.

கட்சியில் இருந்து விலகிய கையோடு சமூக வலைதளங்களில் இருந்தும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விலகியுள்ளார். அரசியல் பணிக்காக தன் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கில் இருந்தும், முகநூல் கணக்கில் இருந்தும் தன்னை விடுத்து இருக்கிறார். 
Tags:    

Similar News