உள்ளூர் செய்திகள்
போலீஸ் சோதனை சாவடியை கோவை கமிஷனர் பிரதீப்குமார் திறந்து வைத்த காட்சி.

சுகுணாபுரம் போலீஸ் சோதனை சாவடியில் 4 காமிரா

Published On 2022-01-12 11:13 GMT   |   Update On 2022-01-12 11:13 GMT
சுகுணாபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் சோதனை சாவடியை கமிஷனர் திறந்து வைத்தார்.
குனியமுத்தூர்:

குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுகுணாபுரத்தில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.  


கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பிரதீப்குமார், பொறுப்பேற்ற நாளன்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது சுகுனாபுரம் சோதனை சாவடி மிகவும் பழைய கட்டிடமாக காட்சியளித்ததை கண்டு உடனே அதை புதுப்பிக்க உத்தரவிட்டார். 

அதன் பேரில் அந்த சோதனைச்சாவடி புதுப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது புதுப்பிக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் அந்த சோதனை சாவடியை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் துணை கமிஷனர் உமா, குனியமுத்தூர் ரேஞ்ச் உதவி கமிஷனர் ரகுபதிராஜா, குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சின்னராஜ், மற்றும் காவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த சோதனைச்சாவடி யில் நான்குபுறமும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News