செய்திகள்
பிரதமர் மோடி

பொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி உரை

Published On 2021-04-20 16:40 GMT   |   Update On 2021-04-20 16:40 GMT
இந்தியாவில் 2-வது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அச்சுறுத்தி வரும் நிலையில, கொரோனா தடுப்பூசியும் துரிதமாக செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல், முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வர வேண்டும். பொதுமுடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும்.

பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி. தைரியத்தையும் அனுபவத்தையும் வைத்து மட்டுமே கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அதிகரிப்பதன் மூலமும், கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலமும் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும். பொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும் " என்றார்.
Tags:    

Similar News