செய்திகள்
மாட்டுவண்டியில் வந்த அமைச்சர் கேசி வீரமணி.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா- மாட்டுவண்டியில் வந்த அமைச்சர்

Published On 2021-01-13 12:10 GMT   |   Update On 2021-01-13 12:10 GMT
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் அமைச்சர் கேசி வீரமணி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.சி.வீரமணி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

அப்போது பொங்கல் திருநாள் உழவுக்காக பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு நன்றிசெலுத்தும் நாளாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். கால்நடைகளை வணங்கி அவற்றிற்கும் உரிய மரியாதை வழங்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தப்பாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தவில் நாதஸ்வரம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News