வழிபாடு
ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவிலில் யாகசாலை பூஜை

ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவிலில் யாகசாலை பூஜை

Published On 2022-04-05 04:11 GMT   |   Update On 2022-04-05 04:11 GMT
குடமுழுக்கையொட்டி ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பாலம் அருகில் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சாமி கோவில் உள்ளது.  பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது. நாளை (புதன்கிழமை) இந்த கோவிலில் குடமுழுக்கு நடக்கிறது.

இதையொட்டி நேற்று மாலை கடங்கள் பிரதிஷ்டை செய்து யாகசாலை முதல் கால பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜையும்,  மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 10 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது. 10.30 மணிக்கு ஆலய விமான குடமுழுக்கும், 10.45 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கும் நடக்கிறது.

விழாவில் திருவாவடுதுறை ஆதீனம், சூரியனார்கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான நிறுவனர் விட்டல்தாஸ் மஹராஜ் சுவாமிகள், தமிழக அரசு கொறடா கோவி செழியன், ராமலிங்கம் எம்.பி., மயிலாடு துறை இணை ஆணையர் மாரிமுத்து, கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நிர்மலாதேவி, தக்கார் அருணா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News