செய்திகள்
தமிழக போலீசார் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்

அகில இந்திய பணித்திறனாய்வு போட்டி - பதக்கங்கள் வென்ற தமிழக போலீசார், முதலமைச்சரிடம் வாழ்த்து

Published On 2019-07-30 00:57 GMT   |   Update On 2019-07-30 00:57 GMT
அகில இந்திய பணித்திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக போலீசார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை:

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 62-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த போலீசாரும், அதிகாரிகளும் மற்றும் துணை ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்களை வென்று தமிழக போலீஸ்துறை அணி முதலிடம் பெற்றது.

தங்கப் பதக்கங்களை வென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஜான்விக்டர், போலீஸ் மோப்ப நாய் பயிற்சியாளர் ஏ.மார்டின், போலீஸ்காரர் ஐ.முருகானந்தம், தங்கம்-வெள்ளி பதக்கங்களை வென்ற சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.விஜய், வெள்ளி பதக்கங்களை தட்டி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ.வீராசாமி, போலீஸ் மோப்ப நாய் பயிற்சியாளர் பி.லோகநாதன், போலீஸ்காரர் ஏ.முரளிதரன், வெண்கல பதக்கங்களை வென்ற இன்ஸ்பெக்டர் கே.அருணா ஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் கே.விக்னேஷ் பிரபு, ஜெ.இந்துமதி, போலீஸ்காரர் என்.ஜெயராஜ்.

அறிவியல் சார்ந்த புலனாய்வு திறன் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற அணி தலைவரான கூடுதல் எஸ்.பி. எஸ்.ஆறுமுகசாமி, 2-ம் இடத்துக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற குழுவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஆர்.ஜெயசுதா, சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பாரதி, மோப்ப நாய் பிரிவு போட்டியில் முதலிடத்துக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பெற்ற குழு தலைவரான போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.கமலக்கண்ணன் ஆகிய 13 போலீசார் மற்றும் 2 பயிற்சியாளர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 87 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற தஞ்சை மாவட்டம் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பி.அனுராதாவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று வாழ்த்து பெற்றார். அப்போது தலைமை செயலாளர் க.சண்முகம், கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News