ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் 2-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் ரத்து

Published On 2021-10-29 05:10 GMT   |   Update On 2021-10-29 06:28 GMT
புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடபட உள்ளது. இதையொட்டி 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

கோவில் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் முன்னதாக விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 27,216 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,806 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News