செய்திகள்
கோப்புப்படம்

கொள்முதல் மையங்களில் வெண்பட்டுக்கூடுகள் விலை உயர்வு

Published On 2021-06-23 06:56 GMT   |   Update On 2021-06-23 06:56 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகளை கோவை, தர்மபுரி, ஓசூர், சேலம் மற்றும் மைவாடி ஆகிய அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். 

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை.இதனால் கடந்த சில நாட்களாக கொள்முதல் மையங்களில் வெண்பட்டுக்கூடுகள் விலை உயர்ந்து வருகிறது.நேற்று மைவாடி மையத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.435 வரை விலை கிடைத்தது. சராசரியாக கிலோ ரூ.391 வரை விலை நிலவரம் இருந்தது.
Tags:    

Similar News