செய்திகள்
திமுக

சிங்காநல்லூர் தொகுதியை திமுக இழந்தது எப்படி?

Published On 2021-05-04 10:24 GMT   |   Update On 2021-05-04 10:24 GMT
சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 36,855 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா 8,366 ஓட்டுகளும் பெற்றனர்.
கோவை:

கடந்த முறை வென்ற சிங்காநல்லூர் தொகுதியை தி.மு.க. இழந்தது எப்படி? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016-ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியை மட்டும் தி.மு.க. வென்றது.

கடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த நா.கார்த்திக் 75,459 ஓட்டுகள் பெற்று 5,180 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த. சிங்கை என்.முத்து 70,279 ஓட்டுகளை பெற்றார். இந்த தேர்தலில் சிங்காநல்லூர் உள்பட மேலும் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க. களம் இறங்கியது.

எனவே இந்த தேர்தலிலும் தி.மு.க. சார்பில் நா.கார்த்திக் போட்டியிட்டார். இவர் 70,390 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் 81,244 ஓட்டுகளை பெற்று 10,854 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் கடந்த தேர்தலை விட நா.கார்த்திக்கிற்கு 5069 ஓட்டுகள் குறைவாகவே கிடைத்துள்ளது. இதற்கிடையே சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 36,855 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா 8,366 ஓட்டுகளும் பெற்றனர். இதுவும் தி.மு.க. தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News