வழிபாடு
சிவலிங்கம்

தேப்பெருமாநல்லூர் விசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது

Published On 2021-12-31 06:33 GMT   |   Update On 2021-12-31 06:33 GMT
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேதாந்த நாயகி உடனாகிய விசுவநாதர் கோவிலில் பிரதோஷ காலத்தில் மட்டும் கிழக்குப்புற வாசல் கதவு திறக்கப்படுவது வழக்கமாகும்.
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் வேதாந்த நாயகி உடனாகிய விசுவநாதர் கோவில் உள்ளது. இங்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடைபெறுவது வழக்கம். இந்த தலத்துக்கு ஒருமுறை வந்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் பிரதோஷ காலத்தில் மட்டும் கிழக்குப்புற வாசல் கதவு திறக்கப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் இக்கோவிலில் நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

இதையொட்டி கூட்டு வழிபாடு கோவில் அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News