உள்ளூர் செய்திகள்
உடன்குடி மாநாட்டில் பேரவையின் மாவட்ட தலைவர் ரவி பேசிய காட்சி.

ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும்-உடன்குடி மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-05-07 10:01 GMT   |   Update On 2022-05-07 10:01 GMT
ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்தின மாநாடு உடன்குடியில் நடந்தது. பேரவையின் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

வியாபாரிகள் சங்க தலைவர்கள் செந்தமிழ்செல்வன் (ஆறுமுக–நேரி), தமிழரசன் (ஆத்தூர்), அருணாச்சலம் (முக்காணி), கணேசன் (திருச்செந்தூர்), லிங்கம் (பரமன்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் வரவேற்றார்.

சிறு, நடுத்தர வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன்வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும், வியாபாரிகள் பன்னாட்டு நிறுவன பொருட்கள் விற்பதைத் தவிர்த்து உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்க வேண்டும், வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை காலதாமதமின்றி வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் துரைசிங், லட்சுமணன், வேல்ராஜன், மகேஷ்ராஜன், சேகர், வீரமணி, அப்துல்லத்தீப், மதன், ஷேக் முகம்மது, மாரியப்பன், இக்பால் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர். உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.
Tags:    

Similar News