உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்த காட்சி.

நெல்லையில் இன்று கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரம்-மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்

Published On 2022-01-28 10:32 GMT   |   Update On 2022-01-28 10:32 GMT
நெல்லையில் இன்று கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
நெல்லை:

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நெல்லை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. வாகன பிரசாரம் இன்று தொடங்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.  

இதில் மாநகர நகர் அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலர் ஜூனி ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் 7 போலீசாரும் அடங்குவர்.
Tags:    

Similar News