செய்திகள்
அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

Published On 2021-07-27 11:44 GMT   |   Update On 2021-07-27 14:13 GMT
அகிலேஷ் யாதவ் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, ராமர் கோவில் தொடர்பாக சர்ச்சையான தகவலை வெளியிட்ட போலி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் பெயரில் அடையாளம் தெரியாத நபர் டுவிட்டர் கணக்கு தொடங்கி  அவதூறு பரப்புவதாக அக்கட்சியினர் புகாரளித்துள்ளனர்.

மேலும், சமாஜ்வாதி கட்சி ராமர் கோவிலுக்கு பதிலாக அதே இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் எழுப்பும் என்று அந்த போலிக் கணக்கில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான ஆதாரங்களை காவல்துறையினரிடம் அளித்தனர்.

நரேஷ் உத்தம் என்பவர் அளித்த புகாரின் பெயரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று  வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News