ஆட்டோமொபைல்
2021 ஜாகுவார் எக்ஸ்.எப்.

புதிய ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த ஜாகுவார்

Published On 2021-10-26 12:02 GMT   |   Update On 2021-10-26 12:02 GMT
ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எக்ஸ்.எப். மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2021 எக்ஸ்.எப். ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் தெய்தது. புதிய செடான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 ஜாகுவார் எக்ஸ்.எப். துவக்க விலை ரூ. 71.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

பேஸ்லிப்ட் மாடல் என்பதால், எக்ஸ்.எப். மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற கிரில் சற்றே பெரிதாகவும், ஸ்டட்-ரக டிசைன் கொண்டிருக்கிறது. இதன் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வடிவமைப்பும் மாற்றப்பட்டு இருக்கிறது. பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய கிராபிக் டிசைன் கொண்டிருக்கிறது. 



உள்புறம் 11.4 இன்ச் பி.வி.-ப்ரோ தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜாகுவார் எக்ஸ்.எப். மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 247 பி.ஹெச்.பி. திறன், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News