உள்ளூர் செய்திகள்
வைத்தியநாதன் பேட்டை பனையூர் கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா.

நல்லேர் பூட்டும் விழா

Published On 2022-04-16 10:03 GMT   |   Update On 2022-04-16 10:03 GMT
திருவையாறு அருகே நல்லேர் பூட்டும் விழா நடைபெற்றது.

திருவையாறு:

திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி பனையூர் கிரா-மத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் கட்டும் விழா நடந்தது.  ஒவ்வொரு தமிழாண்டும் சித்திரை வளர்பிறை

நன்னாளில் விவசாயிகள் தமது வயலில் நல்லேர் கட்டி அவ்வாண்டுக்-கான விவசாயப் பணிகளைத் தொடங்குகிறார்கள்.

இந்த சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல்நாள் நேற்று வளர்பிறைப் பிரதோஷம் முதலிய சிறப்பு வாய்ந்த நாளான நேற்று பனையூர் கிராம விவசாயிகள் தத்தமது எருதுகளைக் குளிப்பாட்டியும்,

கலப்பைகளை நீரினால் கழுவியும் சந்தணம் குங்குமம் பொட்டு வைத்து அலங்கரித்தார்ள். கிராம கோயில் விவசாய நிலத்தில் உழவுக் கலப்பையுடன் எருதுகளை இணைத்து நல்லேர் பூட்டி வெல்லம்

கலந்த பச்சரிசி, பழவகை-களுடன் கணபதி பூஜை, பூமி பூஜை, சூரிய பூஜை, வருண பூஜை முதலிய பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்கள்.பின்னர் உழவுக் கலப்-பையுடன் இணைக்கப்பட்டிருந்த

எருதுகளுக்கும் தூப, தீபம் காட்டி, இந்த ஆண்டு தமது வயல்களில் நல்ல விளைச்சல் காண வருணன், சூரியன் மற்றும் வாயு முதலிய தேவர்கள் உறுதுணை புரிந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை

செய்து வயலில் உழவு செய்தார்கள். பின்னர், நெல், உளுந்து, பயறு மற்றும் எள் முதலிய தானியங்களை தெளித்து விதைத்தார்கள். விழாவில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News