உண்மை எது
வைரல் புகைப்படம்

இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் பள்ளி - வைரலாகும் புகைப்படம்

Published On 2021-12-03 05:02 GMT   |   Update On 2021-12-03 05:02 GMT
குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியின் நிலை என கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சேதமற்ற கட்டிடம் ஒன்றினுள் சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புகைப்படத்தில் உள்ள பள்ளி கட்டிடம் அபாயகரமான சூழலில் மேற்கூரை இடிந்த நிலையில் காட்சியளிக்கிறது. சூரிய சக்தி பள்ளியை குஜராத் அரசாங்கம் திறந்துள்ளது எனும் தலைப்பில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இது உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆகும். இந்த புகைப்படத்தை மார்ச் 9, 2018 ஆம் ஆண்டு ஜோகிந்தர் ராவத் என்ற நபர் பேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கிறார்.

அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது குஜராத் அரசு பள்ளி இல்லை என உறுதியாகிவிட்டது. இந்த பள்ளி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாத நிலையில் இருப்பதாக ஆகஸ்ட் 2019 வாக்கில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த பள்ளி இன்றும் சரி செய்யப்படாத நிலையிலேயே இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
Tags:    

Similar News