செய்திகள்
தமிழ்நாடு அரசு

கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்த போலீசார் - அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் - அரசாணை வெளியீடு

Published On 2020-08-06 22:27 GMT   |   Update On 2020-08-06 22:27 GMT
கொரோனா தடுப்புப்பணியில் பணியாற்றி உயிரிழந்த போலீசார்-அரசு ஊழியர்கள் என 28 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவத்துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர் எவராவது முன்களத்தில் பணியாற்றி மரணமடைய நேரிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அப்படி உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை அரசுத் துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் கொடுத்துள்ளனர். அவற்றை அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வகையில் 28 பேரின் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த 28 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க அரசாணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News