செய்திகள்
யோகி ஆதித்யநாத்

2 கோடி தடுப்பூசி - உத்தரபிரதேச அரசு சாதனை

Published On 2021-06-06 22:57 GMT   |   Update On 2021-06-06 22:57 GMT
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றான உத்தரபிரதேசத்தில், தடுப்பூசி போடும் பணியை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
லக்னோ:

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றான உத்தரபிரதேசத்தில், தடுப்பூசி போடும் பணியை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ‘ஜூன் திட்டம்’ என்ற திட்டத்தின்கீழ், 30 நாட்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரத்து 598 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மற்றொரு சாதனை அளவாக, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு 30 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.



இந்நிலையில் நேற்று நடைபெற்ற கொரோனா உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கொரோனா 3-வது அலையைத் தடுப்பதற்கு அதிகமான பேருக்கு தடுப்பூசி போடுவது அவசியம். ஜூலை மாதம் முதல் தினமும் குறைந்தபட்சம் 10 லட்சம் டோஸ்கள் போடப்படும். அடுத்த 3 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அதிக ஜனத்தொகையை கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஜூன் திட்ட இலக்கை ஜூலை மாதத்தில் 3 மடங்கு அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News