செய்திகள்
வாக்களித்ததற்கான அடையாள மை

தர்மபுரியில் 3 1/2 மணி நிலவரப்படி 61.35 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2021-04-06 10:28 GMT   |   Update On 2021-04-06 10:28 GMT
தர்மபுரி மாவட்டத்தில் 3 1/2 மணி நிலவரப்படி 61.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தர்மபுரி:

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 3 1/2 மணி நிலவரப்படி 61.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:

தர்மபுரி- 61.84
பாலக்கோடு- 61.32
பென்னாகரம் - 60.22
பாப்பிரெட்டிப்பட்டி-61.70
அரூர் (தனி) 61.59

Tags:    

Similar News