செய்திகள்
மு.க.ஸ்டாலின்

திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர்... பிறைசூடன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-10-08 15:06 GMT   |   Update On 2021-10-08 15:06 GMT
காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (வயது 65) காலமானார். இன்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

“நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர் - உடன்பிறப்பு" என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. 



பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News