உள்ளூர் செய்திகள்
கலெக்டர் சமீரன்

கோவையில் நாளை ஓவிய பயிற்சி முகாம்-கலெக்டர் சமீரன் தகவல்

Published On 2022-04-16 09:49 GMT   |   Update On 2022-04-16 09:49 GMT
சிறந்த ஓவியங்கள் கலந்து கொண்டு ஓவிய முறைகள் குறித்த செயல்முறை விளக்கங்களும், பயிற்சியும் அளிக்க உள்ளார்.
கோவை: 

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் ஏப்ரல் 15 அன்று கொண்டாடப்படும் ஓவிய தினத்தினை முன்னிட்டு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இந்த தினத்தினை சிறப்பாக கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒவிய பயிற்சி முகாம் நடக்கிறது.

இதில் சிறந்த ஓவியங்கள் கலந்து கொண்டு ஓவிய முறைகள் குறித்த செயல்முறை விளக்கங்களும், பயிற்சியும் அளிக்க உள்ளார். 

கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 வயது முதல் 16 வயது வரை உள்ள ஓவியம் ஆர்வம் உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

மேலும் விவரம் வேண்டுவோர் கோவை ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்து கொள்ளலாம்.

இந்த வாய்ப்பினை கோவை மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆர்வம் உள்ள சிறார்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News