செய்திகள்
கமல் ஹாசன்

பேட்டரி டார்ச் சின்னம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது மக்கள் நீதி மய்யம்

Published On 2020-12-18 15:34 GMT   |   Update On 2020-12-18 15:34 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைகோரி, மக்கள் நீதி மய்யம் ரிட் மனு தாக்கல் தாக்கல் செய்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கியது.

கமல் ஹாசன் மக்களவை தேர்தலில்போது பயன்படுத்தி பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்க கேட்டிருந்தார். ஆனால், புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அதிருப்தி அடைந்துள்ளார். எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னத்தை விட்டுகொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேட்டரி டார்ச் சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைகோரி சென்னை உயிர்நீதிமன்ற்தில் மக்கள் நீதி மய்யம் ரிட் மனு தாக்கல். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News