ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி.

எலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2020-01-16 10:18 GMT   |   Update On 2020-01-16 10:18 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்கானதாகும்.

புதிய இ.கியூ. பிராண்டை தவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இ.கியூ.சி எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. எஸ்.யு.வி. கார் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இ.கியூ.சி. கார் பார்க்க சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இ.கியூ.சி. எஸ்.யு.வி. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பி.ஹெச்.பி. பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News