பெண்கள் உலகம்
தன்னம்பிக்கை தரும் தலைமைப் பண்புகள்

தன்னம்பிக்கை தரும் தலைமைப் பண்புகள்

Published On 2021-12-30 02:50 GMT   |   Update On 2021-12-30 06:26 GMT
வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளலாமல் செயலில் இறங்க வேண்டும். தோற்று விடுவோமோ? என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கையே உதவும்.
கற்கும் கல்வி தான் ஒவ்வொருவரின் தனித்திறமையையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும்.

பெண்கள் தாங்கள் வளர்வதற்கு முன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயர விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்றவை தேவை. இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருப்பது தன்னம்பிக்கை தான். இதை மனதில் கொண்டவர்கள் எப்போதும் சோர்வு அடைவதில்லை.

உலக அளவில் செய்யப்படும் அரிய சாதனைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது தன்னம்பிக்கை தரும் வலிமையே. வெற்றி இலக்கை அடைய தன்னம்பிக்கையுடன் சேர்ந்த உற்சாகம் இருந்தால் போதும். விரும்பியதை அப்படியே செய்து காட்டலாம்.

தன்னம்பிக்கை கொண்டவர்கள் தாங்கள் மட்டுமின்றி தங்களுடன் இருப்பவர்களின் எண்ண ஓட்டங்களையும் நேர்மறையாக மாற்றுகின்றனர். மற்றவர்களிடம் நல்ல நம்பிக்கையை பெறுவது கூட வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். நமக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து பெருமைப்பட வேண்டும். அந்த எண்ணமே சிறந்த தன்னம்பிக்கை தரும். சுய சந்தேகத்துடன் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வது இன்னும் சிறப்பாக செயல்பட உதவும். பாராட்டுகிறவர்களையும், நேர்நிலை எண்ணங்கள் கொண்டவர்களையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். சரியான புரிதல்களுடன் நம்மை பற்றி நாமே உயர்வாக நினைக்க பழகுவது மனவலிமையை கூட்டும்.

வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாமல் செயலில் இறங்க வேண்டும். தோற்று விடுவோமோ? என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கையே உதவும். நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள், உலகம் நம்மை திரும்பி பார்ப்பதெல்லாம். இருக்கட்டும். முதலில் உலகை நாம் திரும்பி பார்ப்போம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தலைமை பண்புகள் எனும் பல உயர்பதவிகள் நம்மை அழகு படுத்தக்காத்திருக்கும்.

தன்னம்பிக்கையை வளர்க்க நம்மிடம் இருக்கும் செல்வம், உடைமைகள், திறன்கள், சாதனைகள் மற்றும் பண்புகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. நம் உடல் ஆரோக்கியமாக சிறந்து விளங்கும் போது இயல்பாகவே அதிக தன்னம்பிக்கை பிறக்கும். ஆகவே ஆரோக்கியமான உடலுடன் நற்சிந்தனைகள் கொண்டு மகிழ்வான வாழ்க்கை முறையை வைத்து கொள்ளுங்கள். தொடர் வெற்றியாளராக வலம் வருவீர்கள் .
Tags:    

Similar News