செய்திகள்
கோப்புபடம்.

கோவில் நகைகள் உருக்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 26ந்தேதி போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு

Published On 2021-10-18 09:19 GMT   |   Update On 2021-10-18 09:19 GMT
தொழில் நகரமான திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூர்:

இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அவிநாசியில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர்குமார், தாமு வெங்கடஷேவரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில்  தொழில் நகரமான திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்தை கண்டித்து வருகிற 26 - ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது, தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளின்றி பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News