செய்திகள்
பஸ்கள்

சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

Published On 2021-10-08 08:46 GMT   |   Update On 2021-10-08 08:46 GMT
சென்னையில் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய விசே‌ஷ நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களும் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இதையொட்டி பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

சென்னையில் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வழக்கமாக தினமும் கோயம்பேட்டில் இருந்து 2,250 பேருந்துகள் இயக்கப்படும். விசே‌ஷ நாட்களை கருதி கூடுதலாக 1,000 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 12-ந் தேதி 220 பஸ்களும், 13-ந் தேதி 780 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை போக்குவரத்துக்கழகங்கள் சார்பிலும் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாகவும் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


Tags:    

Similar News