தொழில்நுட்பச் செய்திகள்
ஐபேட் ஏர் 2022

அட்டகாசமான அம்சங்களுடன் வெளியாகியுள்ள ஐபேட் ஏர் 2022- விலை இது தான்...

Published On 2022-03-09 06:14 GMT   |   Update On 2022-03-09 06:14 GMT
இந்த ஐபேட் ஏர் 2022-க்கு வரும் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2022 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐபேட் ஏர், ஐபேட் ஓஎஸ் 15-ல் இயங்குகிறது. இதில் 10.9 இன்ச் எல்.இ.டி லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே, 2360x1640 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுள்ளது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், பி3 வைட் கலர் காமுட், ட்ரூ டோன் வைட் பேலன்ஸ் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஐபேட் ஏர் 2022-ல் ஆக்டாகோர் எம்1 சிப் பிராசஸரை கொண்டுள்ளது. இது இதற்கு முன் இருந்த ஐபேட் ஏரை விட 60 சதவீதம் அதிகமான சிபியூ பெர்ஃபார்மன்ஸ், 2 மடங்கு அதிக கிராபிக்ஸ் பெர்பார்மன்ஸை தருகிறது. இந்த சிப்பில் ஆப்பிள் நியூரல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படுவதற்கு உதவுகிறது.

ஐபேட் ஏரில் 12 மெகாபிக்ஸல் வைட் பின்புற கேமரா f/1.8 லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் ஃபோகஸ் பிக்ஸல் கொண்ட ஆட்டோ ஃபோகஸ், பனோரமா, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர், போட்டோ ஜியோடேகிங், இமேஜ் ஸ்டேபிளைஷேசன், பர்ஸ்ட் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி 24,25,30,60 fps 4கே ரெக்கார்டிங்கை தருகிறது. இதில் 120fps-ல் 1080p ஸ்லோமோஷன் சப்போர்ட்டும் இருக்கிறது.

இந்த ஐபேடில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் செல்ஃபி கேமரா, மெஷின் லேர்னிங் பேக்ட் சென்டர் ஸ்டேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இந்த முன்பக்க கேமராவில் 122 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.



ஐபேட் ஏரில் 28.6Wh லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வெப் பிரவுசிங் அல்லது வைஃபையில் வீடியோ பிளே பேக்கை வழங்குகிறது. வைஃபை+செல்லுலார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் வெப் பிரவுசிங்கிற்கு 9 மணி நேரம் சார்ஜை வழங்கும். இதில் 20W USB-C பவர் அடாப்டர் தரபப்ட்டுள்ளது.

இந்த ஐபேட் ஏரின் வைஃபை மட்டும் உள்ள 64 ஜிபி வேரியாண்டின் விலை ரூ.54,900-ஆகவும், வைஃபை+ செல்லுலார் வசதியுள்ள 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.68,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபேடின் 256 ஜிபி வேரியண்டின் விலை இன்னும் கூறப்படவில்லை.

இந்த ஐபேட் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.
Tags:    

Similar News