செய்திகள்
கோப்புபடம்

புதிய ஓட்டுச்சாவடிகள் - அனைத்து கட்சியினருடன் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-09-23 06:25 GMT   |   Update On 2021-09-23 06:25 GMT
நல்லூர் பகுதியில் உள்ள 229 மற்றும் 230 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர்:

தேர்தல் ஆணையம் 1,500 வாக்காளர்களுக்கு மேல் ஓட்டுச்சாவடிகளை பிரித்து கூடுதலாக ஓட்டுச்சாவடி அமைக்க உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் 240 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. 

இதில் நல்லூர் பகுதியில் உள்ள 229 மற்றும் 230 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவற்றை பிரித்து கூடுதலாக இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைப்பது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி தேர்தல் பிரிவு அலுவலர்கள், மண்டல உதவி கமிஷனர்கள் வாசுகுமார், சுப்ரமணியம் பங்கேற்றனர்.

அரசியல் கட்சியினர் தரப்பில், தெற்கு தொகுதியில் உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் கடந்த தேர்தலின் போது வாக்காளர் பட்டியல் தொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இது போன்ற பிரச்சினைகளால் ஓட்டுப்பதிவு சதவீதம் குறையும். எனவே இதனை சரிசெய்ய வேண்டும் என்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News