ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை உடனே நடத்த வலியுறுத்தல்

Published On 2021-09-27 04:55 GMT   |   Update On 2021-09-27 04:55 GMT
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 17 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம் குமார கோவில் சின்மயா மி‌ஷனில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரி‌ஷத்தின் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு நிறுவாகிகள் ஆலோசனை மற்றும் பயிற்சி நிகழ்ச்சிக்கு மாவட்ட பூசாரி பேரமைப்பு தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார்.

வி.ஹெச்.பிமாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராஜசேகர் போற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரகோவில் சின்மயா மி‌ஷன் சுவாமிஜி நிஜானந்த கிரி ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வி.ஹெச்.பி- யின் பூசாரிகள் பேரமைப்பு மாநில தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதை வரவேற்க்க தகுந்த வி‌ஷயமாக இருந்தாலும் ஏற்கனவே அனைத்து சமுதாய கோவில்களிலும் இந்த செயல் நடைமுறையில் உள்ளது எனவும், அதே வேளையில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்யும் ஒருவரை நீக்கி விட்டு புதிதாக ஒருவரை நியமிப்பதை எதிர்க்கிறோம் அறநிலைய துறை சார்ந்த நடைவடிக்களை வரவேற்கிறோம், பல ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளனர், பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் மீட்க வேண்டியது உள்ளது.அதையும் மீட்க வேண்டும்.

கிராம கோவில் பூசாரிகளின் நல வாரியத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது போன்று 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு நிபந்தனை இன்றி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 17 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தனை ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடப்பது இந்த ஆலயத்தில் தான் என்பது வேதனைக்குரியது. எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விரைந்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல லட்சம் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலானது குலசேகரப்பட்டினம் தசரா விழா. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் பூசாரிகள் பேரமைப்பு போராட்டம் நடத்தும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவிபத்தில் கோயில் மேற்கூரை எரிந்து சேதமானது எனவே பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப தங்கத்திலான மேற்கூரை வேய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி விழாவிற்காக கேரளாவுக்கு கொண்டு செல்லும் சாமி விக்கிரங்களுக்கு-பக்தர்கள் வழிபடவும் வரவேற்பு அளிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். சிதறால் மலைக் கோயிலில் உள்ள பகவதி அம்மன் திருத்தலம் பூஜையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர் எனவே ஆலயத்தை திறந்து பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட ஏராளமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பூசாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News