இந்தியா
ராகுல்காந்தி, பிரதமர் மோடி

சீனா அத்துமீறல் - நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி வலியுறுத்தல்

Published On 2022-01-14 21:29 GMT   |   Update On 2022-01-14 21:29 GMT
பிரதமர் மோடி அரசின் செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளும் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

பூடான் நாட்டுடனான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் சீனா இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருவது குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.  டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமானம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது.   இந்த செயற்கை கோள் புகைப்படங்களை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி.யும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மோடி அரசு முதலில் நமது நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்தது, தற்போது அதனை மீட்கும் நடவடிக்கையை எடுக்காத செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால், உங்கள் நண்பர்களுக்காக எப்படி நிற்பீர்கள்?. இவ்வாறு தமது ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News