தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்- இனி புகைப்படங்கள், வீடியோக்கள்...

Published On 2022-04-09 05:46 GMT   |   Update On 2022-04-09 05:46 GMT
பல அம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 'Disappearing Message' என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தின்படி ஒருவர் நாம் அனுப்பும் மெசேஜ்ஜை படித்தவுடன் தானாகவே டெலிட்டாகும் வகையில் செய்ய முடியும். எத்தனை நாட்களில் டெலிட் ஆக வேண்டும் என்பதையும் நாமே நிர்ணயிக்கலாம்.



ஆனால் இந்த அம்சத்தின் மூலம் ஒருவர் புகைப்படம், வீடியோ ஏதேனும் அனுப்பினால் மெசேஜ் டெலிட் ஆவதற்கு முன்பே அவற்றை சேகரித்துவிட முடியும். இதை தடுப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய அப்டேட்டில் போட்டோ, வீடியோ உள்ளிட்ட ஃபைல்களும் தானாகவே டெலிட் ஆகிவிடும் வகையில் மாற்றம் செய்துள்ளது.

அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் புதிய இமேஜ் எடிட்டிங் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இதன்படி புகைப்படத்தை அனுப்பும்போது நாம் அதில் ஏதேனும் வரைய வேண்டும் என்றால் பென்சில் டூல் மூலம் வரைந்து பிறகு அனுப்ப முடியும். 

இந்த பென்சில் டூல் ஏற்கனவே இருந்தாலும் தற்போது வரும் புதிய அப்டேட்டில் புதிதாக 3 பென்சில் டூல்கள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று புகைப்படங்களை ப்ளர் செய்து அனுப்பும் அம்சமும் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ளது.


Tags:    

Similar News