செய்திகள்
மிசா பி.மதிவாணன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

தி.மு.க முப்பெரும் விழா: பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2021-09-15 14:10 GMT   |   Update On 2021-09-15 14:12 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில், முத்தாய்ப்பு விருதுகள் மற்றும் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை: 

திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கழக முப்பெரும் விழா இன்று (15.9.2021 - புதன்கிழமை) காணொலி மூலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றிட கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்கினார்.



இந்நிலையில், இவ்விழாவில் ஆசிரியர் ‘முரசொலி’ செல்வம் எழுதிய “முரசொலி சில நினைவலைகள்” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார். விருதுகள் பெறுவோர் இம் “முப்பெரும் விழா”வில் முத்தாய்ப்பு விருதுகள் வழங்குவது தான். அதன்படி, கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியார் விருதை - மிசா பி.மதிவாணன் அவர்களுக்கும், அண்ணா விருதை - தேனி எல்.மூக்கையா அவர்களுக்கும், கலைஞர் விருதை - கும்முடிப்பூண்டி கி.வேணு அவர்களுக்கும், பாவேந்தர் விருதை - திருமதி.வாசுகி ரமணன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதை - பா.மு.முபாரக் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.

முப்பெரும் விழா” விருது - பரிசுகளை கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழகத்துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, டாக்டர். க.பொன்முடி, திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Tags:    

Similar News