செய்திகள்
விவசாயம்

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை- ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

Published On 2019-10-09 10:02 GMT   |   Update On 2019-10-09 10:02 GMT
விவசாயிகள் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடகர் கூறியதாவது:-

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.



ரபி பருவ விதைப்புக்கு முன்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த 5300 காஷ்மீரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5.5.  லட்சம் ரூபாய் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News