பெண்கள் மருத்துவம்
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்... செய்ய வேண்டியது என்ன?

Published On 2022-04-18 06:14 GMT   |   Update On 2022-04-18 06:14 GMT
கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.

ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால் எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
Tags:    

Similar News