செய்திகள்
இஸ்ரேல் தூதர் ரோன் மால்கா

இஸ்ரேல் நிபுணர்கள் குழுக்கள் இந்தியா விரைகிறது

Published On 2021-05-09 16:57 GMT   |   Update On 2021-05-09 16:57 GMT
இந்தியா கொரோனா தொற்றால் தள்ளாடி கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் நிபுணர்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைக்கிறது.
இந்தியா கொரோனாவின் 2-வது அலையால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் இல்லாமலும் தடுமாறுகிறது. இதனால் பெரும்பாலான வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் அதிவேகமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளை மிகவும் எளிதாக தயாரிக்கவும் இஸ்ரேல் நிபுணர்கள் குழுக்கள் இந்தியா விரைகின்றன.

இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மால்கா கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவுக்கு நிபுணர்கள் குழுக்களை அனுப்புகிறோம். விரைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், மிகவும் எளிதாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயாரித்தல் போன்றவற்றிற்கு அவர்கள் உதவுவார்கள். இந்தியாவில் குறிப்பிடத்தக்க உற்பத்தி திறன்கள் உள்ளன.

கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் எங்களுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க உதவி செய்ததை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான நட்புணர்வு உள்ளது. உயிர்காக்கும் இந்திய நேரத்தில் எதை வேண்டுமென்றாலும் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News