தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோ ஃபிரண்டியர்

உலகின் முதல் 200 மெகாபிக்ஸல் கேமரா! மோட்டோ கொண்டு வரவுள்ள ஸ்மார்ட்போன்

Published On 2022-03-29 06:47 GMT   |   Update On 2022-03-29 06:47 GMT
இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவரவில்லை.
மோட்டோ நிறுவனம் புதிய மோட்டோ ஃபிரண்டியர் என்ற ஃபிளாக்‌ஷிப் போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்ஸல் கொண்ட பவர்ஃபுல் பிரைமரி கேமரா இடம்பெறவுள்ளது. இதன்மூலம் உலகின் முதல் 200 எம்பி கேமராவாகவும் ஃபிரண்டியர் இருக்கவுள்ளது. 

மேலும் இந்த போனில் 6.67-inch OLED டிஸ்பிளே, 144Hz கொண்ட ஃபுல்ஹெச்.டி+ ரெஷலியூஷன். Qualcomm Snapdragon 8 Gen 1 Plus பிராசஸர்,  12 ஜிபி LPDDR5 RAM, 256ஜிபி UFS 3.1 மெமரி, 4500 mAh பேட்டரி, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.

கேமராவை பொறுத்தவரை இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவில்லை.

இந்த போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தேதி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News