ஆட்டோமொபைல்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைப்பு

Published On 2019-01-30 10:10 GMT   |   Update On 2019-01-30 10:10 GMT
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைக்கப்பட்டது. #ElectricVehicles

 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கான வரி 15 முதல் 30 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. புதிய அறிவிக்கையின் படி இந்த வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் தனி பாகங்களுக்கான வரியை 10 முதல் 15 சதவிகிதமாக குறைக்க மத்திய சுங்க மற்றும் மறைமுக வரிகளுக்கான வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கு சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டது.



இதுதவிர மொபைல் போன்களுக்கான பேட்டரிகளுக்கு இருமடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இனி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 5 சதவிகிதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான வரி இருமடங்கு அதிகரிக்கப்பட்டு தற்சமயம் 20 சதவிகிதமாகியுள்ளது.

புதிய அறிவிப்புகள் குறிப்பிட்ட சாதனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் என அபிஷேக் ஜெயின் தெரிவித்தார். #ElectricVehicles
Tags:    

Similar News