செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி

Published On 2020-10-24 13:17 GMT   |   Update On 2020-10-24 13:17 GMT
இந்திய மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற உரிமை உள்ளது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்றுமுன்தினம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். 

கொரோனா தடுப்பூசியை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக-வின் இந்த தேர்தல் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது நாட்டு மக்களின் உரிமை ஆகும். மக்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

என்றார்.
Tags:    

Similar News