செய்திகள்
கொரோனா ஒழிய குலசேகரம் கோவிலில் சிறப்பு வேள்வி 25 ஆயிரம் வீடுகளில் நடத்துகின்றனர்

கொரோனா ஒழிய குலசேகரம் கோவிலில் சிறப்பு வேள்வி 25 ஆயிரம் வீடுகளில் நடத்துகின்றனர்

Published On 2021-05-18 05:13 GMT   |   Update On 2021-05-18 05:13 GMT
குமரி மாவட்ட இந்து கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் சிறப்பு வேள்வி நடத்துகின்றனர்.
கொரோனா வைரஸ் ஒழியவும், அதற்காக நீண்ட நாட்களாக போராடி வரும் டாக்டர்களின் முயற்சி வெற்றி பெறவும் குமரி மாவட்ட இந்து கூட்டமைப்பு சார்பில் வீடுகள்தோறும் மகா மந்திர ஜெப வேள்வி நேற்று தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் சிறப்பு வேள்வி நடத்துகின்றனர்.

இதன் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காலையில் குலசேகரம் தும்பகோடு அச்சாளீசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வேள்வி நடந்தது. வேள்வியை கிருஷ்ணன் போற்றி நடத்தினார். இந்து கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீபதி ராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகி சதாசிவம், ஒன்றிய பொறுப்பாளர்கள் அனில் குமார், மகாலிங்கம், பாபு சுரேஷ், சசிகுமார் முன்னிலை வகித்தனர். நேற்று முதல் 41 நாட்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்களும், ஆண்களும் எள் வைத்து சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். 41 நாட்கள் நிறைவடைந்த பின்பு மகா யாகம் நடைபெறும் என இந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News