உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் சாலையில் கழிவு மூட்டைகளை போட்டு செல்லும் கும்பல்

Published On 2022-04-16 06:46 GMT   |   Update On 2022-04-16 06:46 GMT
கழிவுகளை உண்ண வரும் நாய்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் வழியாக நாகப்பட்டினம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது. இந்த சாலையில், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டிட கழிவுகள் அடங்கிய 300 க்கும் மேற்பட்ட கழிவு மூட்டைகளை தினந்தோறும் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கொட்டிச் செல்கின்றனர்.

கழிவுகளை உண்ண வரும் நாய்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கழிவுகளை கொட்டிச் செல்லும் மர்ம நபர்கள்-போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News