உள்ளூர் செய்திகள்
ஜூபிலி விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

புனித பிரான்சிஸ் சவேரியார் புதுவையில் தங்கிய 475-ம் ஆண்டு ஜூபிலி விழா

Published On 2022-05-06 09:55 GMT   |   Update On 2022-05-06 09:55 GMT
புனித பிரான்சிஸ் சவேரியார் புதுவையில் தங்கிய 475-ம் ஆண்டு ஜூபிலி விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் புனித பிரான்சிஸ் சவேரியார் தங்கி இயேசுவின் நற்செய்தி பணியாற்றியதின் 475-ம் ஆண்டு ஜூபிலி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மும்பை பேராயர் மற்றும் இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆஸ்வால்ட் கர்த்தினால் கிரேசியாஸ் தலைமை தாங்கினார்.

புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பாலக்காடு சுல்தான் பேட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் அபீர், சென்னை - மயிலை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், புதுவை அமலோற்பவம் பள்ளி தாளாளரும், முது நிலை முதல்வருமான லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, அவரது துணைவியார் அனிபால் ஜெசிந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அவர்களை அருட் தந்தை அருள் புஷ்பம் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.ஜூபிலி திருப்பலி சிறப்பான முறையில் நடைபெற்றது.

புதுப்பிக்கப்பட்ட ஆலயம் புனிதம் செய்யப்படுதல், புனித பிரான்சிஸ் சவேரி–யாரின் முதல் நிலை திருப்பண்டம் நிறுவுதல், திருச்சிலுவை, தேவ நற்கருணை திருப்பேழை, 14 திருச்சிலுவை நிலைகள், திருச் சொருபங்கள் புனிதம் செய்யப்படுதல் ஆகியவை நடைபெற்றறது.

விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
Tags:    

Similar News