செய்திகள்
கோப்புப்படம்

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நொய்டா

Published On 2021-09-13 16:55 GMT   |   Update On 2021-09-13 16:55 GMT
வீட்டில் இருந்து குப்பைகளை சேகரிப்பதில் க்யூ ஆர் கோடு, ஜி.பி.எஸ், சி.சி.டி.வி. தொழில்நுட்பங்களை பயன்படுத்த நொய்டா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக நொய்டா விளங்குகிறது. நொய்டாவை குப்பையில்லா நகராமாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்து குப்பைகளை சேகரிக்க க்யூ ஆர் கோர்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நொய்டாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் க்யூ ஆர் கோர்டு பொருத்தப்பட்டடிருக்கும். குப்பை சேகரிக்க வரும் நபர் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வார். அப்போது வீட்டு நபருக்கு தகவல் சென்றடையும். மாதத்தில் ஒருமுறை வீட்டு நபர் அதிகாரிகளிடம் ஸ்கேன் செய்த விவரத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு குப்பைகளை சேகரிக்க நொய்டா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வியாபாரிகளிடம் இருந்தும் இதேமுறையில் குப்பைகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ஒவ்வொரு வாகனத்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். அதன்மூலம் வாகனம் செல்லும் இடத்தை துல்லியாக அதிகாரிகளால் கண்காணிக்க முடியும்.
Tags:    

Similar News