ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-18 05:58 GMT   |   Update On 2021-01-18 05:58 GMT
செம்பியப்பாளையம் கிராமத்தில் சுந்தரவிநாயகர், செங்கழுநீர் மாரியம்மன், அய்யனாரப்பன், முத்துமாரியம்மன் ஆகிய கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்பியப்பாளையம் கிராமத்தில் சுந்தரவிநாயகர், செங்கழுநீர் மாரியம்மன், அய்யனாரப்பன், முத்துமாரியம்மன் ஆகிய கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 8.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10 மணியளவில் அய்யனாரப்பன், முத்துமாரியம்மன், சுந்தரவிநாயகர், செங்கழுநீர் மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News