செய்திகள்
கோப்புப்படம்

ஆன்லைன் மூலம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Published On 2021-07-27 07:06 GMT   |   Update On 2021-07-27 07:06 GMT
சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடக்க உள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tngasa.in , www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக வருகிற 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகமிருந்தால் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். 

கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News