செய்திகள்
சுதந்திர காஷ்மீர் பதாகையுடன் பெண்

போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்’ பதாகை - மன்னிப்பு கேட்ட பெண்

Published On 2020-01-11 12:19 GMT   |   Update On 2020-01-11 12:19 GMT
ஜே.என்.யூ வன்முறையை கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையை காண்பித்த பெண், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மும்பை:

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த வாரம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை குறித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஜே.என்.யூ வில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களை கண்டித்து மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த போராட்டத்தில் சுதந்திர காஷ்மீர் பதாகை காண்பித்த பெண், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல. நான் மும்பையைச் சேர்ந்த எழுத்தாளர். சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையை நான் காண்பித்தது காஷ்மீரின் அடிப்படை உரிமைகளை குறித்தே. செல்போன் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டதை முன்வைத்தே நான் அந்த பதாகையை காண்பித்தேன். நான் எந்த அமைப்பையும் சார்ந்தவள் அல்ல. குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும்’ என பேசியுள்ளார்
Tags:    

Similar News