செய்திகள்
உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் -உச்ச நிதிமன்றம் உத்தரவு

Published On 2019-11-26 05:43 GMT   |   Update On 2019-11-26 05:43 GMT
மகாராஷ்டிராவில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பாஜக அரசு சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

* எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்பதை, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும்

* சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும்.

* நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக்கூடாது, வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

* முன்னதாக, அவையின் மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News