ஆன்மிகம்
காரைக்கால் நிரவியில் கார்கோடகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

காரைக்கால் நிரவியில் கார்கோடகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-06 06:20 GMT   |   Update On 2021-02-06 06:20 GMT
காரைக்காலை அடுத்த நிரவி காக்கமொழி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கற்பகாம்பாள் சமேத கார்கோடகபுரீஸ்வரர் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
காரைக்காலை அடுத்த நிரவி காக்கமொழி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கற்பகாம்பாள் சமேத கார்கோடகபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை 4-ம் கால யாக பூஜைகளை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 8.50 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News