செய்திகள்
சுஜித் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர்

சுஜித் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிய முதல்வர், துணை முதல்வர்

Published On 2019-10-29 12:41 GMT   |   Update On 2019-10-29 12:41 GMT
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் பெற்றோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
திருச்சி:

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 

இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில், மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று நேரில் சென்றனர்.

சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சுஜித்தின் பெற்றோரை சந்தித்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
Tags:    

Similar News