செய்திகள்
கோப்புப்படம்

பயிர் காப்பீடு சான்று வழங்க ரூ.100 லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Published On 2021-11-16 08:47 GMT   |   Update On 2021-11-16 08:47 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பயிர் காப்பீடு சான்று வழங்க வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

ஆனால் சான்று வழங்காமல் அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளை அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும் ஒரு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக ரூ.100 வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயி ஒருவர் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்கு சென்றதும் அதற்கு வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

மேலும் அந்த வீடியோவில் ரூ.100 லஞ்சம் வாங்குவதை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கொள்ளும் காட்சியும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே வி.ஏ.ஓ. மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News